Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Tur 1 / 49
1
தூர் (மலை) மீது சத்தியமாக!
J.T.Foundation 52:1
2
ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
J.T.Foundation 52:2
3
விரித்து வைக்கப்பட்ட,
J.T.Foundation 52:3
4
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
J.T.Foundation 52:4
5
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
J.T.Foundation 52:5
6
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
J.T.Foundation 52:6
7
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
J.T.Foundation 52:7
8
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
J.T.Foundation 52:8
9
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
J.T.Foundation 52:9
10
இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,
J.T.Foundation 52:10
11
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
J.T.Foundation 52:11
12
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
J.T.Foundation 52:12
13
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
J.T.Foundation 52:13
14
அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
J.T.Foundation 52:14
15
இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
J.T.Foundation 52:15
16
நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
J.T.Foundation 52:16
17
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
J.T.Foundation 52:17
18
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
J.T.Foundation 52:18
19
(அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்."
J.T.Foundation 52:19
20
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
J.T.Foundation 52:20
21
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
J.T.Foundation 52:21
22
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
J.T.Foundation 52:22
23
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
J.T.Foundation 52:23
24
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
J.T.Foundation 52:24
25
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
J.T.Foundation 52:25
26
இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
J.T.Foundation 52:26
27
ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
J.T.Foundation 52:27
28
நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்.
J.T.Foundation 52:28
29
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.
J.T.Foundation 52:29
30
அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?
J.T.Foundation 52:30