Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Fussilet 1 / 54
1
ஹா, மீம்.
J.T.Foundation 41:1
2
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது
J.T.Foundation 41:2
3
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.
J.T.Foundation 41:3
4
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை.
J.T.Foundation 41:4
5
மேலும் அவர்கள் "நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும் நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்" என்று கூறினர்.
J.T.Foundation 41:5
6
நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான் என்று (நபியே!) நீர் கூறும்.
J.T.Foundation 41:6
7
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள் மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
J.T.Foundation 41:7
8
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.
J.T.Foundation 41:8
9
பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன் என்று (நபியே!) கூறுவீராக.
J.T.Foundation 41:9
10
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
J.T.Foundation 41:10
11
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.
J.T.Foundation 41:11
12
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
J.T.Foundation 41:12
13
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
J.T.Foundation 41:13
14
அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள் என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது "எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்" என்று சொன்னார்கள்.
J.T.Foundation 41:14
15
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, "எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
J.T.Foundation 41:15
16
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம் மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும் அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
J.T.Foundation 41:16
17
ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
J.T.Foundation 41:17
18
ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.
J.T.Foundation 41:18
19
மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
J.T.Foundation 41:19
20
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
J.T.Foundation 41:20
21
அவர்கள் தம் தோல்களை நோக்கி, "எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?" என்று கேட்பார்கள் அதற்கு அவை "எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான் அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான் பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறும்.
J.T.Foundation 41:21
22
உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுகு; கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
J.T.Foundation 41:22
23
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
J.T.Foundation 41:23
24
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
J.T.Foundation 41:24
25
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம் ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள் அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாககிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.
J.T.Foundation 41:25
26
நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள. (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள் என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
J.T.Foundation 41:26
27
ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
J.T.Foundation 41:27
28
அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம் நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
J.T.Foundation 41:28
29
(அந்நாளில்) காஃபிர்கள் "எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)" எனக் கூறுவார்கள்.
J.T.Foundation 41:29
30
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
J.T.Foundation 41:30