Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Şuara 1 / 227
1
தா, ஸீம், மீம்.
J.T.Foundation 26:1
2
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகவும்.
J.T.Foundation 26:2
3
(நபியே!) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
J.T.Foundation 26:3
4
நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
J.T.Foundation 26:4
5
இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
J.T.Foundation 26:5
6
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
J.T.Foundation 26:6
7
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
J.T.Foundation 26:7
8
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
J.T.Foundation 26:8
9
அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
J.T.Foundation 26:9
10
உம் இறைவன் மூஸாவிடம் "அநியாயக்கார சமூகத்திடம் செல்க" என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
J.T.Foundation 26:10
11
ஃபிர்அவ்னின் சமூத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
J.T.Foundation 26:11
12
(இதற்கு அவர்) "என் இறைவா! அவர்கள் என்னை பொய்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
J.T.Foundation 26:12
13
என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
J.T.Foundation 26:13
14
மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன் (என்றும் கூறினார்).
J.T.Foundation 26:14
15
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்" எனக் கூறினான்.
J.T.Foundation 26:15
16
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்; "நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
J.T.Foundation 26:16
17
எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு! (எனவும் கூறுங்கள்.)
J.T.Foundation 26:17
18
(ஃபிர்அவ்ன்) கூறினான்; நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
J.T.Foundation 26:18
19
ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர் (என்றும் கூறினான்).
J.T.Foundation 26:19
20
(மூஸா) கூறினார்; "நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
J.T.Foundation 26:20
21
ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
J.T.Foundation 26:21
22
பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?
J.T.Foundation 26:22
23
அதற்கு ஃபிர்அவ்ன்; "அகிலத்தாருக்கு இறைவன் யார்?" என்று கேட்டான்.
J.T.Foundation 26:23
24
அதற்கு (மூஸா) "நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)" என்று கூறினார்.
J.T.Foundation 26:24
25
தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி "நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?" என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
J.T.Foundation 26:25
26
(அப்பொழுது மூஸா) "உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்" எனக் கூறினார்.
J.T.Foundation 26:26
27
(அதற்கு ஃபிர்அவ்ன்;) "நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக்காரரே ஆவார்" எனக் கூறினான்.
J.T.Foundation 26:27
28
(அதற்கு மூஸா) "நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்" எனக் கூறினார்.
J.T.Foundation 26:28
29
(அதற்கு ஃபிர்அவ்ன்;) "நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்" எனக் கூறினான்.
J.T.Foundation 26:29
30
(அதற்கு அவர்) "நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?" எனக் கேட்டார்.
J.T.Foundation 26:30